பௌர்ணமி தியானம்
பௌர்ணமி தினத்தன்று சூரியனும், சந்திரனும் எதிர் எதிர் திசையில் இருக்கும்.
இந்த
நேரத்தில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே சூரியனின் மின் காந்த
அலையும், சந்திரனின் மின் காந்த அதிர்வும் பூமியின் வழியாக சென்று கொண்டு
இருக்கும்.
பூமியில் இருக்கும் நம் மீதும் சூரியன் மற்றும் சந்திரனின் சக்திகள் செயல்பாடுகின்றன.
சூரியன் மற்றும் சந்திரனின் சக்திகள் நமது உடலில் உள்ள சக்கரங்களின் மேல் அதிர்வை ஏற்படுத்துகிறது.
இவ்வாறு
நமது உடலில் உள்ள சக்கரங்களின் மேல் சூரியன் மற்றும் சந்திரனின் சக்தி
அதிர்வு ஏற்படும் நேரத்தில் அந்த சக்கரங்களின் மேல் கவனம் வைத்து தியானம்
செய்யும் போது குண்டலினி சக்தி எழுச்சி பெற்று எண்ணற்ற நன்மைகள் நமக்கு கிடைக்கிறது.
நன்மைகள்:-
- சக்கரங்கள் வலிமை அடையும்
- அனைத்து சக்கரங்களும் சீராக இயங்கும்
- உடல் ஆரோக்கியம் அடையும்
- மனம் அமைதியாகும்
- மனவளம் பெருகும்
- ஒளி உடல் விரிவடையும்
- தெய்வீக உடல் மேன்மையடையும்
- நாடிகள் சமநிலையடையும்
- வசியத்தன்மை ஏற்படும்
- இறை சக்தி பெருகும்.
குரு
ப்ரம்ம ஸ்ரீ இராமரிஷி
இராமரிஷி தியான பீடம்
தியான பயிற்சியில் பங்குபெற கீழே கொடுக்கப்பட்டுள்ள டெலிகிராம் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்
